SuperTopAds

தற்கொலை செய்யும் முன்பாக மாணவி அனுப்பிய கடைசி எஸ்.எம்.எஸ்.! தந்தை பரபரப்பு தகவல்!

ஆசிரியர் - Editor II
தற்கொலை செய்யும் முன்பாக மாணவி அனுப்பிய கடைசி எஸ்.எம்.எஸ்.! தந்தை பரபரப்பு தகவல்!

சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று மாணவி மவுனிகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கல்லூரியில் பெரும் வன்முறை வெடித்தது.

மாணவி மவுனிகா பிஇ முதலாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வில் காப்பியடித்த காரணத்தால் பேராசிரியர் அவரை அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் தேர்வு அறையில் இருந்து வெளியேறி மாணவி கல்லூரி விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து தனது சகோதரனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு அறையின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி மவுனிகாவும் அவரது சகோதரன் ராகேஷ் ரெட்டியும் இரட்டை குழந்தைகள் ஆவார். மேலும், சகோதரன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார்.

அவர் அனுப்பிய கடைசி எஸ்எம்எஸ்ஸில் ஐ லவ் யூ… ஐ மிஸ் யூ சோ மச் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாணவியின் அப்பா கூறுகையில்: எனது மகள் தவறு செய்திருந்தால் என்னிடம் தெரிவித்திருக்கலாம், அதனை விட்டு விட்டு இப்படி ஹால் டிக்கெட்டை கிழித்து எறிவது தவறான முன்னுதாரணம். எனது மகளை தற்போது இழந்து தவிக்கிறேன்.

இதற்கு அரசு கல்லூரி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.