சீனாவில் சர்வதேச பனிக்கட்டி உருவச் சிலை கண்காட்சி புகைப்படங்கள்

ஆசிரியர் - Admin
சீனாவில் சர்வதேச பனிக்கட்டி உருவச் சிலை கண்காட்சி புகைப்படங்கள்

சீனாவின் வடகிழக்கு நகரமான ஹார்பின் நடத்தும் ‘சர்வதேச ஐஸ்-பனித் திருவிழா’ தான். இதில் விலங்குகள், கார்ட்டூன்கள், கேரக்டர்கள், முக்கிய சுற்றுலா சின்னங்கள், ஆகியவற்றை பனிச்சிற்பங்களாக வடித்து, வண்ணமயமாக ஒளியூட்டி ஜொலிக்க விடப்படும்.


மாஸ்கோவின் செஞ்சதுக்கம், பாங்காக்கின் எமரால்ட் புத்தர் கோயில், வரலாற்று பாரம்பரியமிக்க பட்டுப்பாதை தொடர்பான அடையாளங்கள், என களை கட்டியிருக்கும் இத்திருவிழாவை காண லட்சக்கணக்கில் சுற்றுலா பயணியர் வரத் தொடங்கிவிட்டனர்.


‘ஹார்பின் ஐஸ்-ஸ்நோ வேர்ல்ட் பூங்கா’வில் மட்டும், 1,80,000 கன மீட்டர்கள் அளவுக்கு பனிக்கட்டி கொண்டு செய்யப்பட்ட, 2000க்கு மேற்பட்ட சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. பனிக்கட்டி சிற்பப் போட்டிகளுடன், வின்ட்டர் ஸ்விமிங், ஐஸ் ஹாக்கி, பனிச்சறுக்கு, பைக்கிங் போட்டிகளும் இங்கு நடைபெறும். இவ்விழா ஜனவரி 1 முதல் பிப்ரவரி 25 வரை நடைபெறுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு