SuperTopAds

மனுஸ் தடுப்பு முகாமில் நுழைந்த பொலிசார்: உறுதிப்படுத்தியது அவுஸ்திரேலியா!!

ஆசிரியர் - Editor II
மனுஸ் தடுப்பு முகாமில் நுழைந்த பொலிசார்: உறுதிப்படுத்தியது அவுஸ்திரேலியா!!

அவுஸ்திரேலியாவிலுள்ள மனுஸ் தடுப்பு முகாமிற்கு பப்புவா நியூகினியா பொலிசார் நுழைந்துள்ளதை அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

மனுஸ் முகாம் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி மூடப்பட்டது. எனினும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகள் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், மாற்று இடங்களில் குடியேற மறுத்து புகலிடக்கோரிக்கையாளர்கள் 24வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதேவேளை மனுஸ் முகாமிலிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்துபவர்கள், சகல வசதிகளுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 தங்குமிடங்களுக்குச் செல்ல வேண்டுமென, பப்புவா நியூகினி அரசு தொடர்ச்சியாக அறிவித்துவருகின்றது.

இதேவேளை தாங்கள் தங்கியிருந்த அந்த மையத்தின் வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் வந்ததாக, அப்துல் அஜீஸ் ஆடம் எனும் அகதி கூறியுள்ளார்.

அவர்கள் தங்கள் கைகளில் பெரிய ஒலிபெருக்கிகளை வைத்திருந்தனர். ‘நீங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும்’ என்று கூறினார்கள் என்று குறித்த புகலிடக்கோரிக்கையாளர் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் பொலிசாரின் நடவடிக்கை ஆவேசமானதாக இருந்தது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆட்கடத்தல் மற்றும் கடல் பயணங்களின்போது ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்பதால் அவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க அவுஸ்திரேலியா ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.