தனியார் வசமாகும் விண்வெளி ஆய்வு மையம்!

ஆசிரியர் - Admin
தனியார் வசமாகும் விண்வெளி ஆய்வு மையம்!

அமெரிக்கா, ரஷ்யா, கனடா ஜப்பான் மற்றும் ஐரோபிய நாடுகள் இணைந்து கோள்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் சர்வதேச ஆய்வகத்தை கட்டடியுள்ளது. இது பூமியின் சுற்றுவட்டபாதையில் சுற்றி வருகிறது.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. அமெரிக்க அதிபராக ஜார்ஜ் டபிள்யூ புஷ் இருந்தபோது கடந்த 2001 ஆம் ஆண்டு இதன் கட்டுமான பணிகள் துவங்கின. அமெரிக்கா இதற்காக ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவழித்து உள்ளது.

சமீபத்தில், சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு 2018-2019 ஆம் ஆண்டில் செலவிட ரூ.975 கோடி டிரம்ப் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணி 2025 ஆம் ஆண்டு வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், விண்வெளி ஆய்வகத்தை தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த செய்தியை ஆதாரத்துடன் பிரபல பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு