கான்சர் கட்டிகளை அழிக்கும் புதிய சிகிச்சை முறை: - மருத்துவர்கள் சாதனை

ஆசிரியர் - Admin
கான்சர் கட்டிகளை அழிக்கும் புதிய சிகிச்சை முறை: - மருத்துவர்கள் சாதனை

இருதய நோய்க்கு அடுத்து புற்று நோயால் ஏற்படும் உயிர் இழப்புகள் அதிகமாக இருக்கின்றது. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய் எளிதாக குணப்படுத்தப்படுகின்றது. சில வகை புற்றுநோய்கள் அறிகுறிகள் இல்லாமல் உருவாகும். இதனால் அவற்றை குணப்படுத்த முடியாமல் போகிறது. கீமோதெரபி, அலோபதி போன்ற பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர். அதனை எலியின் உடலில் பரிசோதித்து வெற்றி பெற்றதாக கூறியுள்ளனர். இந்த புதிய சிகிச்சையின் படி, முதலில் புற்று நோய் கட்டிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுக்க வேண்டும். உடலில் அடிப்பட்ட போது ரத்தம் வெளியேறுவதை தடுக்க கொடுக்கப்படும் மருந்துகளை இந்த சிகிச்சை முறைக்கு பயன்படுத்துகின்றனர். அவை டி.என்.ஏ. நிறைந்த நானோ ரோபோட்டுகள் மூலம் செலுத்தப்பட்ட உடன் ரத்த ஓட்டம் நிறுத்தப்ப்படும். இதனால் கேன்சர் செல்கள் செயலிழக்கின்றன. அதன் பின் கட்டிகள் சுருங்கிக் கொண்டே இருக்கும். கேன்சர் செல்கள் பரவுவதும் குறையும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளிடம் செய்த சோதனையில், சிகிச்சைக்கு பிறகு எலிகளின் வாழ்நாள் மற்ற எலிகளை விட இரண்டு மடங்காக அதிகரித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இதனை மனிதர்களை போன்ற உடல் உறுப்புகளை கொண்ட பாமா மினியேச்சர் பன்றியின் உடலிலும் சோதனை செய்தனர். விரைவில் மனிதர்களுக்கு இச்சோதனை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தன

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு