SuperTopAds

குழந்தைகளை தாக்கும் 193 நோய்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம்!

ஆசிரியர் - Admin
குழந்தைகளை தாக்கும் 193 நோய்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம்!

நோய்களை கண்டுபிடிக்க பலவிதமான பரிசோதனைகள் நடைபெறுகின்றன. தற்போது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் நோய்கள் கண்டறியப்படுகின்றன. 

அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தியது. அதன் மூலம் குழந்தைகளை தாக்கும் வலிப்பு, முதுகு தண்டு வட பாதிப்பு, மற்றும் புற்று நோய் உள்பட 193 நோய்களை கண்டுபிடிக்க முடியும் என அறிவித்துள்ளது.

இந்த பரிசோதனைக்கு சீமா4 நடாலிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் எடுக்கப்படும் டி.என்.ஏ. மூலம் 5 தடவை பரிசோதனை நடத்துவதன் மூலம் நோய்கள் கண்டறியப்பட்டன. இந்த பரிசோதனைக்கு அமெரிக்க டாக்டர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். 

இதன் மூலம் குழந்தைகளை தாக்கும் நோய்களை தடுக்க சிகிச்சை மேற்கொள்ள முடியும். மேலும் எதிர்கால சந்ததியினருக்கு இத்தகைய நோய் வராமல் தடுக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.