அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் பாரிய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி!

ஆசிரியர் - Admin
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் பாரிய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லோண்டில் உள்ள உயர் கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட பாரிய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

அத்துடன், 20 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்லூரியின் பழைய மாணவரான 19 வயதுடைய, நிக்கலஸ் க்ரூஸ்  என்பவரே இந்தச் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

 

ஒழுக்காற்று நடவடிக்கைகளின் காரணமாக அவர் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில், குறித்த பழைய மாணவன், நேற்றைய தினம் அந்த கல்லூரிக்கு பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

 

அவர் பெருமளவான தோட்டாக்களும், ஏ.ஆர்-15 ரக துப்பாக்கியையும் கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டை நடத்திய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 அமெரிக்காவில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கல்லூரிகளில் 291 துப்பாக்கிச் கூட்டுச் சம்பங்கள் பதிவாகியுள்ளன.

 

 இது வாரத்துக்கு ஒரு துப்பாக்கிச் சூடு என்ற சராசரியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 இதனிடையே, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரப்ம் தமது கண்டணத்தை வெளியிட்டுள்ளார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு