கிளிநொச்சியில் கடற்படையினால் அடித்தும், கடித்தும் துன்புறுத்தப்பட்ட மீனவர்கள்..! சந்தித்து பேசினார் சி.சிறீதரன்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் கடற்படையினால் அடித்தும், கடித்தும் துன்புறுத்தப்பட்ட மீனவர்கள்..! சந்தித்து பேசினார் சி.சிறீதரன்..

கிளிநொச்சி- பூநகரி கிராஞ்சி பகுதியில் மதுபோதையில் கடற்படையினர் நடாத்திய தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நோில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

கடந்த 7ம் திகதி இரவு கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடா த்தியதுடன், மதுபோதையில் கடித்தும் துன்புறுத்தியிருந்தனர். மேலும் முறைப்பாடு எதுவும் கொ டுக்ககூடாது. என கடற்படையினர் அச்சுறுத்தலும் விடுத்திருந்தனர். 

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நோில் சந்தித்து பேசி ஆறுதல் கூறியதுடன், இது குறித்து பொறுப்புவாய்ந்தவர்களுடன் பேசுவதாகவும் உறுதியளித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு