கழுத்தை வெட்டுவதாக ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டிய பிரிகேடியர் பணி நீக்கம்

ஆசிரியர் - Admin
கழுத்தை வெட்டுவதாக ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டிய பிரிகேடியர் பணி நீக்கம்

லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கொலை செய்வதாக மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியரை இலங்கை அரசாங்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்துள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானியாவில் புலம் பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் லண்டன் இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கழுத்தை வெட்டுவதாக இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ சைகை செய்த காட்சி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியுள்ளமை இவரது உடனடி பணி நீக்கத்துக்கு காரணம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.