ஒபிஎஸ்-ன் ரகசியம் அம்பலமானது.! காட்டி கொடுத்த பிரதமர் அலுவலகம்.!!
டெல்லியில் விவசாயிகள் நூறு நாள் தொடர் போராட்டங்களை நடத்தியபோது விவசாயிகள் பிரதமரை மோடியை சந்தித்து பேச வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் விவசாயிகளுக்கு நேரம் ஒதுக்காமல் தர்மயுத்தம் நடத்தி வந்த ஒபிஎஸ்க்கு நேரம் ஒதுக்கப்பட்டு மோடி அவரை சந்தித்து பேசினார்.
அதனால் மோடி காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து எடப்பாடியுடன் இணைந்து துணை முதல்வராக பதவியேற்ற ஒபிஎஸ் தமிழக அரசு சார்ப்பில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது மோடியை சந்தித்த ஒபிஎஸ் தமிழகத்திற்க்கான நிலகரியை கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை அளித்ததாக கூறினார்.
ஆனால் மோடியை சந்தித்த ஒபிஎஸ் எந்த கோரிக்கையும் கொடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஒபிஎஸ் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக தான் மோடியை சந்தித்து பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.