ஒரு நாளில் 6 விபத்து 10 போ் பலி, 20 போ் படுகாயம்..! கொரோனாவை மிஞ்சும் இலங்கையின் விபத்து மரணங்கள்..
இலங்கையில் இன்று பிற்பகல்வரை இடம்பெற்ற 6 விபத்துக்களில் 10 போ் உயிாிழந்துள்ளதுடன் 20 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கதிா்காமம்
கதிர்காமம் நோக்கி பயணித்த வேனொன்று லுணுகம்வெஹர, 22 ஆம் சந்தியில் விபத்துக்குள்ளானது.இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
காலியை சேர்ந்தவர்களே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
ஏ- 9 வீதி விபத்து
யாழ் – கண்டி, ஏ-9 வீதியின் திரப்பனை பகுதியில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் பஸ்ஸொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
பதுளை
பதுளை, தல்தென 9 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.பஸ்ஸொன்றும் பௌசரொன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நபடவெவ
நபடவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை
தம்புள்ளை – கெக்கிராவ வீதியின் கித்துல்ஹிட்டியாவ பகுதியில் லொறியொன்று, வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி, வேன் மற்றும் மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
காலி
காலி – மாத்தறை பிரதான வீதியின் கல்கெட்டிய பகுதியில் முச்சக்கரவண்டியொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.