தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்வார்கள்? அசத்தலாக தமிழில் பிரசாரம் செய்த பௌத்த தேரர்

ஆசிரியர் - Editor II
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்வார்கள்? அசத்தலாக தமிழில் பிரசாரம் செய்த பௌத்த தேரர்

கல்முனை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தற்போதும் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் கல்முனை மாநகர சபைக்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய பௌத்த தேரர் ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கல்முனை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பாரிய கஸ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். அவர்களுக்கு என்று ஒரு மக்கள் பிரதிநிதி இல்லாமல் இருக்கினறனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்வார்கள்? என்னோடு வாருங்கள் என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்தாலும், இல்லை நாங்கள் வரமாட்டோம் என்றுதான் சொல்லுவார்கள்.

இந்த பிரதேசத்தில் இருக்கும் தமிழ் மக்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்திருக்கின்றது? அவர்கள் செய்த அபிவிருத்தி ஒன்றைக் காட்டினால் அந்த இடத்திலிருந்து நான் விலகிச் செல்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு