பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு பிறேமினி கொலை! துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

ஆசிரியர் - Editor II
பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு பிறேமினி கொலை! துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக மாணவி தனுஸ்கோடி பிறேமினிக்கு நீதி கோரி துண்டுப்பிரசுரங்கள் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஒன்றிணைந்த தமிழ் பெண்கள் அமைப்பு என்ற பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும் இந்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, வெலிக்கந்தை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் கடந்த 2006 தை மாதம் 29ஆம் திகதி இவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் படுகொலை செய்யப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரின் கொலைக்கு நீதி விசாரணை எதுவும் இதுவரை இடம்பெறவில்லை.

எனவே இவரின் கொலைக்கு நீதி விசாரணைகள் வேண்டும் என அவர்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வித்தியாவுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது வீதியில் இறங்கி நீதி கேட்டீர்கள், கிருசாந்திக்கு நடந்த கொடூரத்திற்கு குரல்கொடுக்க பலர் இருந்தனர்.

இந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவி தனுஸ்கோடி பிறேமினிக்கு நீதி கேட்க யாரும் இல்லையா?. மார்ச் 8ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டாம்.

இந்த பாதகச் செயலுக்கு நீதியை நிலைநாட்ட அடியெடுத்து வையுங்கள் என அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தபோதே வெலிக்கந்தையில் வைத்து ஆயுதக் குழுவினரால் கடத்தி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டு புதருக்குள் தூக்கி வீசப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு