சுனாமியைவிட பெரிய ஆபத்து ! கடலுக்குள் மூழ்க இருக்கும் ஆசிய நாடு ஒன்றின் முக்கிய நகரம்… !!
புவி வெப்பமயமாகுதல் பிரச்சினை குறித்து விஞ்ஞானிகள் பலமுறை எச்சரித்து வருகின்றனர். ஆனால் உலக நாடுகள் இதற்கான உரிய தீர்வுகளை மேற்கொள்வதில் போதிய அக்கறை காட்டவில்லை.
இந்த நிலையில் கடல் நீர் மட்டம் திடீரென உயர்வதால் தமிழகத்தின் 3209 சதுர கிலோ மீற்றர் பகுதிகள் வரும் 2100 ம் ஆண்டளவில் கடலுக்குள் மூழ்கிவிடும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் தமிழகத்துக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
சுற்றுச்சூழல் ஆய்வுகளின் அடிப்படையில் தமிழக அரசின் மாநில திட்ட ஆணையம் தயாரித்துள்ள ஒரு அறிக்கையில் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அந்த அறிக்கை பொது மக்களுக்கு வெளியிடப்படவில்லை.
அந்த அறிக்கையின்படி வரும் 2050 ம் ஆண்டுக்குள் சென்னை மாநகரில் மட்டும் 144 சதுர கிலோ மீற்றர் கடற்கரைப் பகுதிகள் நீரில் முழ்கிவிடும். மேலும் 10 லட்சம் மக்கள் வசிக்கும் கடற்கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கிடுமாம்.
அத்துடன் எண்ணூர் பகுதி குடியிருப்புக்கள் ஆலைகள் அனைத்தும் கடலில் மூழ்கிவிடும். பட்டினப்பாக்கம்- திருவான்மியூர் நீலாங்கரை- கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளைத் தாண்டி பழைய மகாபலிபுரம் சாலைப் பகுதிகளும் கடலில் சூழ்கிவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள புதிய குடியிருப்புக்கள் வரை கடல்நீர் உள்ளே வர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்பாக்கம் அணு உலை—கடலுர் பெஙற்றோலிய ஆலைகள்- நாகபட்டினமு பெற்றோலிய ஆலைகள் - தூத்துக்குடி உப்பள ஆலைகள்- -கூடங்குள அணு உலை அனைத்தும் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக எச்சிரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட உள்ளதாகவும் இப்பொழுதே மாற்று ஏற்பாடு குறித்து சிந்தித்து திட்டமிடவேண்டும் என்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு இப்பொழுதே விழித்துக்கொள்ள வேண்டும்என்ற எச்சரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. மாநில திட்ட ஆணையம் தயாரித்துள்ள எச்சரிக்கை அறிக்கையை ஒளித்துவைத்துவிட்டு செயல்படாமல் இருந்தால் கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் நிலைமைதான் உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.