வடக்கின் பல பாகங்களில் இன்று திங்கட்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று திங்கட்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிரதேசத்தில்: 

இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை யாழ்.கொழும்புத்துறை ஒரு பகுதி, நெடுங்குளம் ஒரு பகுதி, உதயபுரம், மணியம் தோட்டம், மணியம் தோட்டம் ஐஸ் தொழிற்சாலை, தொம்பை வீதி, உடுவில் மேலதிக அரசாங்க அதிபர் அலுவலக வீதி, அம்பலவாணர் வீதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு