ஊபரில் வந்த உணவுப் பொதிக்குள் 'நத்தை'!
கொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெறப்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.
குறித்த உணவுப்பொதியை ஊபர் மூலம் பெற்றவர், அந்த உணவின் ஒரு பகுதியை உட்கொண்ட பின்னரே அதில் நத்தையை கண்டதாகவும் இது மிகவும் அருவருப்பான அனுபவமாக இருந்தது என முகநூலில் பகிர்ந்துள்ளார்.
குறித்த நபர் அந்த உணவகத்தை தொடர்பு கொண்டு பின்னர் அங்கு சென்றுள்ளார். இதன்போது உணவகத்தின் மேலாளர் அரிசி பையில் பல நத்தைகளைக் கண்டுபிடித்ததாகவும், அவர் அரிசி விநியோகஸ்தர்கள் மீது குற்றம் சாட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.