ஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்பாக முக்கிய நகர்வுகளை முன்னெடுக்கப்போகிறதாம் இலங்கை!
ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்பாகவே பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து சில முக்கிய நகர்வுகளை கையாள இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் முடிந்தவுடன் அடுத்தகட்டமாக காணமல்போனோர் சட்டமூலம், பயங்கரவாத திருத்த சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த வாரம் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் சிவில் அமைப்புகளும், மனித உரிமைகள் குறித்து செயற்பட்டுவரும் நிறுவன தலைவர்கள் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ள நிலையில் ஜெனிவா கூட்டத்தொடரை கையாளும் நகர்வுகள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தேர்தலின் பின்னர் சில முக்கிய வேலைத்திட்டங்களை கையாளும் வகையிலும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.