வவுனியாவிலும் 5ஜி கோபுரம் என உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக அக்கோபுரம் அகற்றப்படும்
வவுனியா திருவாற்குளம் விளையாட்டு மைதானம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 5ஜி கோபுரம் என்று உறுதிப்படுத்தப்பட்டால் அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படும் என வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகர்ப்பகுதிகளான பண்டாரிக்குளம், திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தைச் சூழவுள்ள குடும்பங்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்ற நிலையில் அவற்றினை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை அண்மையில் வவுனியா இறம்பைக்குளம் மயானப்பகுதியில் கோபுரம் அமைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட வேலை அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டதோடு, அதற்காக வெட்டப்பட்ட குழியையும் மூடிவிட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது