அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையில் மாற்றம்!

ஆசிரியர் - Editor II
அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையில் மாற்றம்!

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு இனிமேல் தகுதி அடிப்படையில் மட்டுமே குடியுரிமை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்க நீதித்துறையும், உள்நாட்டு பாதுகாப்புத் துறையும் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் இதுவரை கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் நான்கில் ஒருவர், தற்போதைய குடியேற்ற விதிமுறைகளின் அடிப்படையில் அமெரிக்காவில் நுழைந்தவர்கள்’ என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தகுதி அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கு ஏற்ற வகையில், அதன் விதிமுறைகளில் மாற்றம் செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதன் மூலம், சட்ட விரோத குடியேற்றத்தை தவிர்க்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த முடிவு குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில்,

“அமெரிக்காவில் குடியேறுபவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தகுதி அடிப்படையில் மட்டுமே அவர்களுக்கு விசா வழங்க வேண்டும் என்பதில் அதிபர் உறுதியாக உள்ளார்.

இது மிகவும் நியாயமான திட்டம்” என்றார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இப்போதுள்ள குடியேற்ற விதிமுறைகள், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

தகுதி மற்றும் அமெரிக்கா மீதுள்ள விருப்பத்தின் அடிப்படையில் சரியான நபர்களை தேர்வை செய்ய தவறும்போது பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தகுதி அடிப்படையில் குடியேற்ற அனுமதி வழங்கும்போது, வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்களின் திறமை, செயல்திறன் மற்றும் ஆங்கிலப் புலமை ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்’’ என்றார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு