4 மணி நேரமாக போயஸ் கார்டனில் நடைபெற்ற சோதனை.! சிக்கிய ஆவணங்கள் என்ன..!!
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு பின்னர் சோதனை நடத்தப்பட்டது.
ஆனால் சோதனை வீடு முழுவதும் இல்லாமல் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறையில் மட்டுமே சோதனை நடத்துவதாக வருமான வரிதுறையினர் விளக்கமளித்தனர்.
தற்போது இந்த சோதனை முடிவடைந்து 10 அதிகாரிகள் வெளியே வந்தனர். சோதனையின் போது கடிதங்கள் பென் டிரைவ்கள் லேப்டாப் ஆகியவைகளை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாகவும் அதில் முக்கிய ஆவணங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனை குறித்து விவேக் கூறியபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களையும், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப் ஆகியவற்றையும் வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
அம்மா ஜெயலலிதாவின் அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறினார்.