மஹிந்தவை தேடிச்சென்ற அமெரிக்க தூதுவர்!
அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு இன்று எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோரும் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள், தற்போதைய அரசியல் பின்னணி மற்றும் இரு நாடுகளுக்கிடையில் ஏற்கனவே இருக்கும் உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து விவாதித்ததாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.