சசிகலா பரோலில் வந்த போது 600 கோடி சொத்து பெயர் மாற்றம்.! ஐடி பிடியில் சிக்கிய கிருஷ்ணபிரியா.!!
சசிகலாபரோலில்வந்தபோது 600 கோடிசொத்துபெயர்மாற்றம்.! ஐடிபிடியில்சிக்கியகிருஷ்ணபிரியா.!!
சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரிதுறையினர் 5 நாட்களாக சோதனை நடத்தினர்.
இந்நிலையில் இன்று இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறையிலிருந்து பரோலில் வந்த சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியிருந்தார்.
பரோலில் வந்த 5 நாட்களில் ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பெயர் மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
இதற்க்கும் கிருஷ்ணபிரியாவுக்கு தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணைக்கு இளவரசியின் இன்னொரு மகள் ஷகிலாவும் ஆஜராகியுள்ளார்.