போர் கப்பல், யுத்த விமானங்களை குவித்தது அமெரிக்கா! கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

ஆசிரியர் - Editor II
போர் கப்பல், யுத்த விமானங்களை குவித்தது அமெரிக்கா! கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

கொரிய தீபகற்பத்தைச் சுற்றிலும் அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் யுத்த விமானங்கள் உள்ளிட்ட அதிநவீன தாக்குதல் விமானங்களைக் குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வட கொரியாவை அதிர்ச்சியடையச் செய்துள்ளதுடன், கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரியாவில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையிலேயே, அமெரிக்கா கொரிய தீபகற்பத்தைச் சுற்றிலும் விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளிட்ட தாக்குதல் விமானங்களைக் குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வடகொரியா கருத்து தெரிவிக்கையில், “வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி பதற்றம் தணிந்துள்ளது.

இந்நிலையில், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா தனது அதிநவீன போர்க் கப்பல்கள், விமானங்களை குவித்து வருவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என தெரிவித்துள்ளது.<

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு