பிபிசியில் பணியாற்றும் இலங்கைத் தமிழருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

ஆசிரியர் - Editor II
பிபிசியில் பணியாற்றும் இலங்கைத் தமிழருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

இலங்கையில் பிறந்து பிபிசியில் பணியாற்றும் இலங்கையர் ஒருவர் இரண்டாவது முறையாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தலைநகர் கொழும்பில் பிறந்த ஜோர்ஜ் அழகையா என்பவரே இவ்வாறு இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

பிபிசி செய்தியாளர் ஜோர்ஜ் அழகையா இரண்டாவது முறையாக குடல் புற்றுநோய்க்கு மருத்துவ சிகிச்சையில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

62 வயதான ஜோர்ஜ் அழகையா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சிகிச்சை முறை மற்றும் முன்னோக்கி செல்லும் வழிமுறை பற்றி அவரது மருத்துவ குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த 2014ஆம் ஆண்டு அழகையா முதல் சிகிச்சையை பெற்ற நிலையில் 18 மாதங்களின் பின்னர் மீண்டும் திரையில் தோன்றினார்.

“எனது திறமையான மருத்துவர்கள் என்னை நோயிலிருந்து விடுதலடையக்கூடிய நிலைக்குத் திரும்ப தீர்மானித்துள்ளனர், மேலும் அதை அவர்களால் செய்ய முடியும் என்று எனக்கு தெரியும் என அழகையா குறிப்பிட்டுள்ளார்.

“குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பது பற்றி நான் கடந்த காலங்களில் கற்றுக்கொண்டேன், அந்த பகுதியில் நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். இந்த புதிய சவாலுக்கு நான் தயாராய் இருக்கிறேன் என அழகையா மேலும் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டில் அவர் தனக்கு நான்கு பிரிவு குடல் புற்றுநோயை உள்ளதனை கண்டறிந்தார். தனது கல்லீரலில் எட்டு கட்டிகளை நீக்க மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு அவரை உட்படுத்த வேண்டியிருந்தது.

அனைத்து சிகிச்சைகளிலும் மீண்டவர் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் பிபிசியில் செய்தி வாசிக்கும் பணியை ஆரம்பித்திருந்தார்.

1955ஆம் ஆண்டு ஜோர்ஜ் அழகையா இலங்கை தலைநகர் கொழும்பில் பிறந்தார். தற்போது அவரது வயது 62 ஆகின்றது.

7 வருடங்கள் பத்திரிகை ஊடகவியலாளராக செயற்பட்டவர் 1989ஆம் ஆண்டு பிபிசியில் இணைந்தார்.

செய்தி வாசிப்பதற்கு முன்னர், அழகையா ஒரு முன்னணி வெளிநாட்டு நிருபராக இருந்தார். ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை மற்றும் ஆப்கானிஸ்தான், லைபீரியா, சியரா லியோன் மற்றும் சோமாலியாவில் இடம்பெற்ற உள்நாட்டு போர் சம்பவங்கள் பற்றி அறிக்கை செய்தார்.

2003ஆம் ஆண்டு முதல் பிபிசியில் 6 மணி செய்தியை அழகையா வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு