SuperTopAds

சசிகலாவின் அக்கா மகளுக்கு சிறை .! சசிகலா குடும்பத்துக்கு மீண்டும் வந்த சோதனை..!!

ஆசிரியர் - Editor II
சசிகலாவின் அக்கா மகளுக்கு சிறை .! சசிகலா குடும்பத்துக்கு மீண்டும் வந்த சோதனை..!!

சசிகலாவின் அக்கா மகள் மற்றும் அவரது கணவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் சிபிஜ நீதிமன்றம் பாஸ்கரனுக்கு 5 வருட சிறைதண்டனையும் 20 லட்சம் அபராதமும் விதித்தது.

மேலும் அவரின் மனைவி சீதளதேவிக்கு 3 வருட சிறைதண்டனையும் 10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து இவர்கள் இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இதன் தீர்ப்பு இன்று வெளியானது.

அதில் சிபிஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.

பாஸ்கரன் ரிசர்வ் வங்கியில் ரூபாய் நோட்டு ஆய்வாளராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தான் இன்று தண்டனை உருதியாகியுள்ளது.

இதனால் பாஸ்கரனும் அவரது மனைவியும் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.