SuperTopAds

கொழும்பு நகருக்குள் இலகு அதி நவீன இலகு ரயில் திட்டம்..! 1850 மில்லியன் அமொிக்க டொலா் செலவில்.. பிரதமா் ரணில் ஆரம்பிக்கிறாா்.

ஆசிரியர் - Editor I
கொழும்பு நகருக்குள் இலகு அதி நவீன இலகு ரயில் திட்டம்..! 1850 மில்லியன் அமொிக்க டொலா் செலவில்.. பிரதமா் ரணில் ஆரம்பிக்கிறாா்.

இலங்கையின் நீண்டகால தேசிய தேவைப்பாட்டினைக் கருத்தில் கொ்டு போக்குவரத்து துறையின் புரட்சிகரமான புதிய வரலாறு நோக்கிய பாதையில் ஜப்பானின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள 

இலகு தொடரூந்து போக்குவரத்து Colombo Light Rail செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று 

வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மாலபே மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படள்ளது. 16 புகையிரத நிலையங்களை உள்ளடக்கிய, 17 கிலோமீற்றர் நீளமான புகையிரத பாதையைக் கொண்ட இத்திட்டத்திற்கு, 

ஜப்பானின் ஜய்கா நிறுவனம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குகின்றது.  ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளது. இதனால் 45-90 நிமிடங்கள் எடுக்கும் பயண நேரமானது 32 நிமிடங்களக குறைக்கப்படும்.

இந்த திட்டத்திற்காக ஜப்பானிய அரசாங்கம் 1850 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குகின்றது. இதன் முதற்கட்ட நிர்மாணப்பணிகளுக்கு, 260 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை 6 கட்டங்களாக வழங்குவதே ஜப்பான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

இதற்கான கட்டுமானம் 2024 ஆம் ஆண்டு முடிவுக்குகொண்டுவரப்படுவதுடன் 2025 ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.