சிறை அதிகாரிக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்.! மீண்டும் விசாரணை நடத்த முடிவு..!!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
ஆனால் சசிகலா சிறையில் சொகுசாக இருப்பதாக டிஐஜி ரூபா தகவலை வெளியிட்டார்.
மேலும் வெளியே சென்று ஷாப்பிங்க் செய்துவிட்டு திரும்பும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக ஓய்வுபெற்ற அதிகாரி வினய்குமார் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் தனி சமையலறை இருந்தது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனால் சசிகலா சிறை அதிகாரிக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்தார் எனபது பற்றி எந்த தகவலும் இல்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டி.ஐ.ஜி. ரூபா, ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரிக்க வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து சசிகலா கொடுத்த ரூ.2 கோடி லஞ்சம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.