நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக ஒப்படைக்கப்பட்ட நகைகளை திருடிய நீதிமன்ற ஊழியா்கள்..!

ஆசிரியர் - Editor I
நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக ஒப்படைக்கப்பட்ட நகைகளை திருடிய நீதிமன்ற ஊழியா்கள்..!

வடக்கு மாகாணத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் சான்றுப் பொருட்களாக ஒப்படைக்கப்பட்ட தங்க நகைகளை நீதிமன்றப் பணியாளர்களே களவாடியதனால் சம்பவம் தொடா்பில் குற்றப் புலனாய்வுத்துறையின் விசாரணை இடம்பெறுகின்றது.

பல்வேறு இடங்களில் களவாடப்பட்ட நகைகளில் ஒரு தொகுதி நகைகள் பொலிசாரினால் மீட்கப்பட்டு சான்றுப் பொருட்களாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சான்றுப் பொருட்களாக ஒப்படைக்கப்பட்ட நகைகள் நீதிமன்றில் பத்திரப்படுத்தி பேணப்பட்டது.

இவ்வாறு பேணபட்ட சமயம் குறித்த விடயம்  வழக்காக நீதிமன்றில் இடம்பெறுகையில் நகைகளை களவு கொடுத்தவர்களிற்கு நகைகள் மீளக் கையளிக்கப்படவில்லை. அவ்வாறு நகைகள் மீளக் கையளிக்காதமை தொடர்பில் மன்றினால். 

ஆராய்ந்தபோதே மேற்படி சம்பவம் தெரிய வந்துள்ளது. அதாவது நீதிமன்றில். பணியாற்றும் இரு பணியாளர்கள் சான்றுப் பொருட்களை களவாடிச் சென்று வெளியில் அடைவு வைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சான்று பொருட்களை களவாடிய நீதிமன்ற பணியாளா்களிடம் குற்றப்புலனாய்வுப் பொலிசார் விசாரணைகளை நடாத்திவரும் நிலையில் நகையின் உரிமையாளர்களிற்கு நகை இன்றுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு