யாழ்.மாநகரசபையில் இடம்பெற்ற டீசல் களவை கண்டுபிடித்த ஊழியருக்கு 15 சம்பளத்தை நிறுத்திய சாதனை..
யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாதாந்தம் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் லீற்றர் டீசல் வரையில் பாவனை ஏற்படுவதாக கணக்கிடப்படுகின்றது.
அதாவது ஆணையாளர் , முதல்வர் , பொறியியலாளர் உட்பட பணியாளர் சேவை முதல் தீ அணைப்பு சேவை , கழிவு அகற்றல் என அனைத்து வகையான பாவனைகளையும் உள்ளடக்கி மாதாந்தம் சராசரி 8 ஆயிரம் லீற்றர் டீசல் செலவு ஏற்படுகிறது.
இதன் அடிப்படையில் 2018 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7 ஆயிரத்து 590 லீற்றர் டீசல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆயிரத்து 648 லீற்றர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆயிரத்து 169 லீற்றரும்
2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆயிரத்து 132 லீற்றர் டீசல் பயன் படுத்தப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ள அதேநேரம் 2019 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆயிரத்து 230 லீற்றர் மட்டுமே பயன் படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று 2019ம் ஆண்டு மார்ச் மாதமும் 6 ஆயிரத்து 343 லீற்றர் டீசல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்படுகின்றது.
இந்த நிலையில் ஒக்டோபர்,நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பயன்படுத்தப்பட்ட டீசலின் அளவில் பெப்ரவரி, மார்ச் மாதங்களளில் மட்டும் திடீர் என்று இந்த வீழ்ச்சி
ஏன் ஏற்பட்டது குறித்த மாதங்களில் மட்டும் யாழ்.மாநகர சபையின் செயற்பாடுகள் மந்த கதியில் நடைபெற்றதா என ஆராயப்பட்டபோது பணிகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை .
மாறாக வாகானப் பகுதிக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவர் மாற்றப்பட்டு கண்டிப்புடன் செயல்பட்டமை கண்டறியப்பட்டது.
அவ்வாறு வெப்ரவரி மாதம் வாகனப் பகுதிக்கு புதிதாக மிகவும் கண்டிப்பான ஒர் தொழிநுட்ப உத்ததியோகத்தர் நியமிக்கப்பட்டார்.
இரண்டு மாதங்களில் மட்டும் இவ் குறைவான டீசல் பயன்படுத்தப்பட்டது பின்னர் வாகனப்பகுதி ஊழியர்கள் அந்த தொழில்நுட்ப உத்மியோகத்தருடன் முரன்பட்டு
அவர் மார்ச் மாதத்துடன் மாற்றப்பட்டார் . அதன் பிற்பாடு டீசலின் அளவு மீண்டும் பழைய நிலமைக்கு அதிகரித்துள்ளது.
இதனால் வாகனப்பகுதியில் இனம்பெற்ற முரண்பாடு வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுப்பும் அதேநேரம்
அந்த முரண்பாட்டுக் காலத்தில் தொழில் நுட்ப உத்தியோகத்தர் பெற்ற விடுமுறையும் வேண்டுமென்றே சம்பளமற்ற விடுமுறையாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது மாதாந்தம் 2 ஆயிரம் லீற்றர் டீசல் என்பது ஓர் மிகப் பெரும் தொகையாகவுள்ள நிலையில் இது தொடர்பில் கணக்காய்வுத் திணைக்களம்
மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் என்பன விசேட கவனம் செலுத்த வேண்டும் என சில உறுப்பினர்கள் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் கவனத்திற்கு கோண்டு செல்லப்பட்டுள்ளது.