SuperTopAds

அரச காணியில் 10 வருடங்களுக்கு மேல் குடியிருக்கிறீா்களா..? அந்த காணி இனி உங்களுக்கே உாியது..

ஆசிரியர் - Editor I
அரச காணியில் 10 வருடங்களுக்கு மேல் குடியிருக்கிறீா்களா..? அந்த காணி இனி உங்களுக்கே உாியது..

அரசாங்க காணியில் 10 வருடங்களுக்கு மேலாக குடியிருந்தால் அவா்களுக்கே அந்த காணியை வழங்கி நிலையான உாிமை பத்திரத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு இந்த வேலைத் திட்டம்தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய சட்ட மூலத்திற்கு அமைய 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் அரச காணிகளில் வசிப்பவர்கள், அவற்றை விற்பதற்கோ அல்லது வேறு ஒருவருக்கு 

மாற்றுவதற்கான உரித்தை பெறுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், வங்கி கடன்களை பெறுவது போன்ற சட்டபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவும் 

அவர்கள் வாய்ப்பினை பெறுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.