இரு வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்து..! 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி, 5 போ் படுகாயம்..
அனுராதபுரம் - தலாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இருவாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உயிாிழந்துள்ளதுடன், 5 போ் காயமடைந்துள்ளனா்.
தலாவ - மொரகொட - சுனாமி சந்தி பகுதியில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தம்புத்தேகமயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த சிற்றூந்து ஒன்றும் அனுராதபுரம் தொடக்கம் தம்புத்தேகம நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றும்
இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிற்றூந்தில் பயணித்த மேலும் 03 பெண்கள் உட்பட 5 போ் காயமடைந்து
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விபத்தில் பாரவூர்தியின் சாரதி மற்றும் இரு உதவியாளர்கள் காயமடைந்துள்ளதுடன்
கல்நேவ பிரதேசத்தினை சேர்ந்த பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.