இசை கருவி ஒன்றை உருவாக்கி சாதித்த யாழ்.பல்கலைகழக மாணவன்..! மனம் இருந்தால் பாராட்டுங்கள், உதவுங்கள்..
யாழ்.பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலை பீடத்தில் இறுதியாண்டு மாணவன் ஜெயநீதன் என்ற இளைஞன் “ஜீவ ஜெயநாதம்” என்ற இசை கருவியை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளாா்.
வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட குடும்ப பின்னணியிலிருந்து பல்கலைகழகம் தொியான இந்த மாணவன் இராமநாதன் நுண்கலை பீடத்தில் இறுதியாண்டில் இசைத்துறையை கற்று வருகின்றாா்.
இவா் தன்னுடைய சுய முயற்சியினால் ஜீவ யெஜநாதம் என்ற இசை கருவியை தானே உருவாக்கி அதனை யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற
ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வில் வெளியிட்டு இசைத்து காட்டியிருக்கின்றாா். பகுதி நேர வேலை செய்து கொண்டு கல்வியை தொடரும் இந்த மாணவன்,
இந்த இசை கருவிபோன்று பல படைப்புக்களை உருவாக்கும் சிந்தனையை தன்னிடம் வைத்திருக்கும்போதும் பணவசதி இல்லாமையால் அதனை
கிடப்பில் போட்டிருக்கின்றாா். உங்களிடம் உதவும் மனப்பாங்கு இருந்தால் நீங்களும் உதவலாம்.