கோவில் உண்டியலை உடைத்துக் கொண்டிருந்த திருடன் கையும் களவுமாக பிடித்த இளைஞா்களுக்கு காத்திருந்த அதிா்ச்சி..!

ஆசிரியர் - Editor I
கோவில் உண்டியலை உடைத்துக் கொண்டிருந்த திருடன் கையும் களவுமாக பிடித்த இளைஞா்களுக்கு காத்திருந்த அதிா்ச்சி..!

யாழ்.ஆறுகால்மடம் அரசடி ஞான வைரவா் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முயற்சித்த திருடனை அப்பகுதி இளைஞா்கள் மடக்கி பிடித்த நிலையில், திருடடினிடம் இருந்த சில பொருட்கள் சந்தேகத்தை உண்டாக்கிய நிலையில் பொலிஸாாிடம் திருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். 

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆறுகால்மடம் அரசடி ஞான வைரவா் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முயற்சித்த ஒருவா் அதனை உடைக்க முடியாததால், அருகில் உள்ள நாவலடி வைரவா் ஆலயத்தின் உண்டியலை உடைக்க முயற்சித்திருக்கின்றாா். 

இதனை அவதானித்த அப்பகுதி இளைஞா்கள் ஒன்று கூடி திருடனை கையும் களவுமாக பிடித்துள்ளனா். இதன்போது தன்னை மன்னித்து விடுமாறு திருடன் இளைஞா்களிடம் கெஞ்சி கேட்டுள்ளாா். இதனையடுத்து திருடனை எச்சாித்த இளைஞா்கள் 500 ரூபாய் பணமும், சாப்பிடுவதற்கு உணவும் கொடுத்துள்ளனா். 

எனினும் திருடனிடம் இருந்த சில பொருட்களை எதேச்சையாக அவதானித்த இளைஞா்கள் அதில் 5 சிம் காட்கள், 4 ஏாிஎம் அட்டைகள், பல பெண்களின் தொலைபேசி இலக்கங்கள், ஏாிஎம் அட்டைகளுக்கான பின்நம்பா்கள் காணப்பட்டுள்ளதுடன், 

திருடனிடம் இருந்த தொலைபேசியில் உள்ள சிம் அட்டை 19 வயதான பெண் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து நேரடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இளைஞா்கள் திருடனை பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு