பலாலி விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக மாற்றும் யோசனையும் அரசிடம்..
பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் எதிா்வரும் ஜீலை மாதம் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாகவும், சா்வதேச விமான நிலையமாகவும் மாற்றும் யோசனை அரசாங்கத்திடம் உள்ளதாக கூறப்படுகின்றது.
நேறறு நாடாளுமன்றில் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்துஉரையாற்றிய பிரதி அமைச்சர் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம் உயா்த்துவோம் என கூறியிருந்தாா்.
இதற்கிடையில் ஜீலை மாதம் 5ம் திகதி பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்போது சா்வதேச விமான நிலையத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.