மைதானத்தில் அடித்து கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்த்தா்..! நாளாந்த விசாரணைக்கு தவணையிட்டது யாழ்.மேல் நீதிமன்றம்..
யாழ்.வட்டுக்கோட்டை- பிக்னல் விளையாட்டு மைதானத்தில் இளம் குடும்பஸ்தா் அடித்து கொலை செய்யப்பட்டமை தொடா்பாக 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திாிகை மீதான விசாரணை 9ம் மாதம் 5ம் திகதி தொடக்கம் நாளாந்த விசாரணைக்கு எடுக்க யாழ்.மேல் நீதிமன்றம் தவணையிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிமன்று, வழக் கின் அத்தனை சாட்சிகளையும் மன்றில் மீளவும் முற்படவும் உத்தரவிட்டது. வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையே 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி
வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது. அதில் இரு தரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலமை மோதலானது. யாழ்ப்பாணம் பிரதான வீதியைச் சேர்ந்தவரும் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவனு மான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24) என்னும் ஒரு பிள்ளையின்
தந்தை அதில் உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலை யத்தில் 9 பேர் வரை சரண்டைந்தனர். மல்லாகம் நீதிமன்றில் சுருக்க முறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதனையடுத்து 6 பேருக்கு எதிராகக் கொலைக் குற்றச் சாட்டின் கீழான குற்றப் பத்திரிகை
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது. வழக் கின் சாட்சியப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. எனினும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளின் சட்டத்தரணிகளால்
இந்த வழக்கை இடை நிறுத்துவதற்கான மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னி லையில் வழக்கு விசாரணை நடத்த ஆட்சேபனை தெரிவித்தே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான ஆரம்ப விசாரணையில் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் முன் வைத்த சமர்ப்பணத்தை முகதளவில் ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை உத்த ரவை 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி வழங்கியது.
அதன்பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் யாழ்ப்பா ணத்திலிருந்து மாற்றலாகி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப் பேற்றதால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை 2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மனுதாரர்கள் மீளப்பெற்றுக் கொண்டனர்.
அதையடுத்து இந்தக் கொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் திணைக்களம் மீளத் திறந்தது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்ன லிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன்
மன்றில் முன்னிலையானார். முதலாவது எதிரிக்காக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திர னும், இரண்டாவது எதிரிக்காக கேசவன் சயந்தனும் ஏனைய எதிரிகளுக்காக சட்டத்த ரணிகள் வி.திருக்குமரன், கே.சுகாஷ் ஆகியோரும் முன்னிலையானார்கள். குற்றவி யல் வழக்கை விசாரணை செய்த நீதிபதி மாற்றலாகிச் செல்லும்போது,
வழக்கின் சாட்சிகளை மீளப் பதிவு செய்யக் கோரும் சட்ட ஏற்பாடு எதிரி தரப்புக்கு உள்ளது. அதனடிப்படையில் இந்த வழக்கிலும் அனைத்து சாட்சிகளையும் அழைத்து மீள விளக்கம் நடத்த அனுமதிக்கவேண்டும் என்று எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.
அதை ஆராய்ந்த மன்று, வழக்கின் அத்தனை சாட்சிகளையும் மன்றில் முற்படுவதற் கான அழைப்புக் கட்டளையைச் சேர்ப்பிக்க பதிவாளருக்கு உத்தரவிட்டது. வழக்கை நாளாந்த விளக்கத்துக்காக செப்ரெம்பர் 5,6,9 மற்றும் 10ஆம் திகதிகளில் நியமித்து மேல் நீதிமன்றம் தவணையிட்டது.