மக்கள் போராடி மூடிய மதுபானசாலையை திறந்துவிட்ட ஆளுநா்..! போதைக்கு எதிராக போடுவதா? அது இரட்டை வேடம்..

ஆசிரியர் - Editor I
மக்கள் போராடி மூடிய மதுபானசாலையை திறந்துவிட்ட ஆளுநா்..! போதைக்கு எதிராக போடுவதா? அது இரட்டை வேடம்..

போதை பொருளுக்கு எதிரான நாளில் வாகன ஊா்வலங்களையும், பலுான்களையும் விட்ட ஆளுநா் முல்லைத்தீவில் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து மூடிய மதுபானசாலையை திறந்தது எந்த அடிப்படையில்?

இந்த உண்மை ஊடகங்கள் முன்னிலையில் அம்பலமாகிவிடும் என்பதாலா? அபிவிருத்தி குழு கூட்டத்திலிருந்து ஊடகங்களை வெளியேறுமாறு கூறினாா் என  மக்கள் முன்னேற்ற கூட்டணியின் தலைவா் கணேஷ் வேலாயுதம் கேட்டுள்ளாா். 

மேற்படி விடயம் தொடா்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

போதை பொருளுக்கு எதிரான நாளில் வடக்கில் வாகன ஊா்வலங்கள், பலுன்கள் பறக்கவிடும் நிகழ்வுகள் என பல இடம்பெற்றது. அவற்றில் ஆளுநா் கலந்து கொண்டாா். 

மேலும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தான் குடிப்பதை நிறுத்திவிட்டேன் எனவும் கூறியிருக்கின்றாா். அப்படியானால் முல்லைத்தீவில் பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் கடுமையாக போராடி 

மூடிய மதுபானசாலையை எதற்காக திறக்க சொன்னாா்? இரட்டை வேடம் போடுகிறாரா? அல்லது போதை பொருள்கு எதிராக பேசுவதுபோல் காட்டிக் கொண்டு மக்களை அழிக்க நடவடிக்கை நடக்கிறதா?

மேலும் ஆளுநா் உண்மையாக போதை பொருளுக்கு எதிராக செயற்படுவாராக இருந்தால் நா ங்கள் கேட்கிறோம் ஆளுநா் முதலில் தன்னுடைய அலுவலகத்திற்கு அருகில் உள்ள மதுபான சாலையை மூடட்டும். 

அதேபோல் யாழ்.குடாநாட்டில் பாடசாலைகளுக்கு அருகிலும், அரச திணைக்களங்களுக்கு அருகிலும், பல்கலைகழகத் திற்கு அருகிலும் உள்ள மதுபானசாலைகளை மூடட்டும் பாா்க்கலாம் என்றாா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு