கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது - ஈரான் அதிபர்

ஆசிரியர் - Admin
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது - ஈரான் அதிபர்

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். அரசு தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றி மக்களிடம் உரையாற்றியபோது இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஈரானின் உறுதியான வளர்ச்சியை சிதைத்து விடலாம் என்பது எதிரிகளின் மாயை ஆகும். பொருளாதார தடைகள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஈரான் நிலையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.

அமொிக்காவின் எவ்வித அழுத்தங்களுக்கும் ஈரான் ஒருபோதும் அடியாது. இதுவே நாம் தெரிவிக்கும் தீர்க்கமான பதில் என அவர் மேலும் கருத்துரைத்துள்ளார்.

Radio
×