கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பிரித்தானியப் பிரதமர் தெரசா மே பதவி விலகுகிறார்.

ஆசிரியர் - Admin
பிரித்தானியப் பிரதமர் தெரசா மே பதவி விலகுகிறார்.

எதிர்வரும் யூன் மாதம் 7ஆம் திகதி பழமைவாத கட்சியின் தலைவர் பதவியிலிந்து  விலகப்போவதாக  பிரித்தானியப் பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

லண்டன் நகரில் டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் இல்லத்தில் முன் ஊடகவியலாருக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமராக இருமுறை பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எனது வாழ்நாளின் கவுரவமாக கருதுகிறேன். எவ்வித கவலையும் இல்லாமல் நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகிறேன் என கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Radio
×