மட்டக்களப்பு ஆலயப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியவர் கைது!
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய, பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து வணக்கத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று எருவில் கிராமத்தில் கண்ணகி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்றது. அதிகளவான மக்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர். மாலை 4.30க்கு பின்னர் ஆலயத்தினை அண்டிய சூழலில் சந்தேகத்தின் பேரில் நடமாடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் கிராமத்திற்கும் மக்களுக்கும் அறியப்படாத நபராக இருந்த நிலையில், பிரதேச வாசிகள் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதையடுத்து, ஆலய நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரை அழைத்துச் சென்றுள்ளனர்.