ஈழத் தமிழர்களை இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: தமிழக ஆளுநர்
இலங்கைத் தமிழர்களை இனப் படுகொலை செய்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“இலங்கைத் தமிழர்கள் கண்ணியத்துடனும், பொருளாதாரப் பாதுகாப்புடனும் உரிய அரசியல் உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என மத்திய அரசையும், பன்னாட்டு சமுதாய அமைப்பையும் இந்த அரசு கேட்டுக் கொள்கிறது.
இலங்கைத் தமிழர்களை இனப் படுகொலை புரிந்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.