26ம் திகதி கிழக்கு மாகாணத்திலிருந்து நடக்க தொடங்குகிறாா் சிவாஜிலிங்கம்..

ஆசிரியர் - Editor
26ம் திகதி கிழக்கு மாகாணத்திலிருந்து நடக்க தொடங்குகிறாா் சிவாஜிலிங்கம்..

தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காத இலங்கை அரசாங்கத்தை சா்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துமாறு வலியுறுத்தி 26ம் திகதி கிழக்கிலிருந்து வடக்கு நோக்கிய நடை பயணம் ஒன்றை முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆரம்பிக்கவுள்ளாா். 

திருகோணமலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளில் நீதி கிடைக்க வேண்டும், இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலை வெளிப்படுத்த வேண்டும் 

இவற்றினூடாகவே இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தியே இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.வெறுகல் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால்வரையான 175 கிலோ மீற்றர் தூரம்கொண்ட இந்த நீதிக்கோரிய நடைபயணத்துக்கு, 

பாதிக்கப்பட்ட உறவுகள், காணாமலhக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் அமைப்பினர் ஆகியோர் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Radio
×