வவுனியாவில் வாகனங்களை அடித்து நொருக்கிய இளைஞர் குழு - மூவர் கைது

ஆசிரியர் - Admin
வவுனியாவில் வாகனங்களை அடித்து நொருக்கிய இளைஞர் குழு - மூவர் கைது

வவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்றிரவு, கார் மற்றும் முச்சக்கரவண்டி அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா கோவில்குளத்தில் தரித்து நின்ற கார் மற்றும் முச்சக்கரவண்டியை மதுபோதையில் வந்த இளைஞர் குழு அடித்து நொருக்கியுள்ளனர். இதனால் கார் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இளைஞர் குழுவிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்தனர். கார் மற்றும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றினர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio
×