SuperTopAds

பொலிசார் உள்ளிட்ட 10 பேரை தாக்கி விட்டு பெண் வல்லுறவு! - பிரதேச சபை உறுப்பினர் கைது

ஆசிரியர் - Admin
பொலிசார் உள்ளிட்ட 10 பேரை தாக்கி விட்டு பெண் வல்லுறவு! - பிரதேச சபை உறுப்பினர் கைது

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 10 பேரை தாக்கி காயப்படுத்தி விட்டு, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய், பட்டஹதர பகுதியில் உள்ள குளத்தில் நீராடிக் கொண்டிருந்த, கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் இருவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை குடிபோதையில் வந்த சிலர் தாக்கிவிட்டு அங்கிருந்த பெண் ஒருவரை வல்லுறவுக்குட்படுத்தினர். அவ்விடத்திடத்திற்கு வருகை தந்த பொலிஸ் பரிசோதகர்கள் இருவரையும் குறித்த நபர்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் உட்பட 10 பேர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அதே பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.