பிரான்ஸ் பாரிஸ் நகரில் திடீரென்று தீப்பற்றி எரியும் நோறெ டாம் தேவாலயம்!

ஆசிரியர் - Admin
பிரான்ஸ் பாரிஸ் நகரில் திடீரென்று தீப்பற்றி எரியும் நோறெ டாம் தேவாலயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கேதட்ரல் (Notre Dame cathedral) கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டு அதன் கோபுரம் சரிந்து விழுந்தது  சர்வதேச ஊடங்ககளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மாலை 5.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்புப்படையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகிலேயே ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் உதாரணமாகத் திகழ்ந்த இந்த பழமையான தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டது பாரிஸ் மக்களை மட்டுமன்றி உலக வாழ் கிறிஸ்தவர்களையும் கவலையடைய செய்துள்ளது. அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது விபத்துக்கான காரணம் இது இதுவரை கண்டறியப்படவில்லை என்று என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Radio
×