பிரித்தானியாவில் கணவனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் பெண்! திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின.

ஆசிரியர் - Admin
பிரித்தானியாவில் கணவனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் பெண்! திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின.

பிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி பாக்கியம் ராமநாதன் அடித்தே கொலை செய்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் சொத்து பிரச்சினை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என அரச தரப்பு சட்டத்தரணி தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.

எனினும் கணவனின் கொடுமைப்படுத்தல் மற்றும் தவறான நடத்தை காரணமாக மனைவி இவ்வாறு கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பில் நேற்று முன்தினம் பிரித்தானியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

76 வயதான ஊனமுற்ற கணவர் படுமையில் இருந்த போது மனைவி கோபத்தில் கடுமையாக தாக்கியுள்ளார்.இந்த கடுமையான தாக்குதலினால் அவரது கணவர் உயிரிழந்துள்ளார் என நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 35 வருடங்களாக கணவனின் தவறான நடத்தையை இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமலும், தனது பொறுமையை இழந்தமையினாலும் தான் தாக்கியதாக பாக்கியம் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ராமநாதன் தனது அறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

அவரது தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதுடன், உடலின் பல பகுதியில் காயங்கள் காணப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கிழக்கு லண்டனிலுள்ள அவரது வீட்டின் படுக்கை அறையில், அவரது சடலத்திற்கு அருகில் இரத்த கரையுடனான பலகை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனைவியின் கொடூரமாக தாக்குதலிலேயே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த பலகையை பார்க்கும் போது தெரிவதாக அரச தரப்பு வழக்கறிஞர் Sally O'Neill QC தெரிவித்தார்.

படுக்கையில் இருந்த வயதான ஊனமுற்ற நபர் மீது காணப்பட்ட கடும் கோபத்தை அவரால் மேற்கொண்ட தாக்குலின் ஊடாக உணர முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணம் தொடர்பான விவாதம் ஒன்று தாக்குதல் தினத்திலும் அதற்கு முன்னரும் காணப்பட்டுள்ளது. கொலை செய்த பெண்ணின் சகோதரன் இலங்கையில் உள்ள தனது சொத்துக்களை மோசடி செய்வதாக கொலை செய்யப்பட்ட கனகசபை ராமநாதன் இலங்கை பொலிஸாருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த முற்பட்டுள்ளார்.

இந்த கடிதத்தை பார்த்த மனைவி கடும் கோபமடைந்துள்ளார். இந்த கொலைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் என அரச தரப்பு சட்டதரணி தெரிவித்துள்ளார். அது எதிர்பாராததாக இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அது வேண்டுமென்றே இருந்தது மற்றும் அது கொடூரமானதாக இருந்தது என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு வீட்டவர்களின் ஏற்பாட்டில் இந்த தம்பதி திருமணம் செய்துள்ளனர். இலங்கையில் காணப்பட்ட யுத்தம் காரணமாக1985 ஆம் ஆண்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனில் உள்ள அகதி முகாமில் இரண்டு வருடங்கள் வாழ்ந்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு இந்த தம்பதி மீண்டும் இலங்கை சென்றுள்ளார். பின்னர் மீண்டும் தனது கணவருடன் ஜேர்மன் சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அவர் மனைவி மறுத்துள்ளார்.

2007ஆம் ஆண்டும் மீண்டும் இணைந்த தம்பதி கிழக்கு லண்டனுக்கு சென்று வாழ ஆரம்பித்தனர். 2012ஆம் ஆண்டும் மீண்டும் இலங்கை வந்த போது கணவனுடன் சேர்ந்து வாழ மனைவி விரும்பவில்லை.

இவ்வாறே அவர்கள் வாழ்க்கை தொடர்ந்த நிலையில் மீண்டும் லண்டனில் வாழ்ந்து வந்துள்ளார். இவ்வாறான நிலையில் கடந்த வருடம் அவர் கணவனை கொலை செய்துள்ளார் என சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“எனினும் அவ்வாறு பாக்கியம் திட்டமிட்டு கொலை செய்திருந்தால் சிறுநீரக நோயில் பாதிக்கப்பட்டிருந்தன கணவனுக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றி கொலை செய்திருக்கலாம். அது இயற்கை மரணம் போன்றிருந்திருக்கும்.

எனினும் அவர் அடித்தே தான் கொலை செய்துள்ளார். தன்னை அறியாமல் ஆத்திரத்தில் தான் பட்ட துன்பத்தின் காரணமாகவும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தனது இயலாமையினால் பொறுமையை இழந்து இந்த கொலையை செய்துள்ளார். கணவனினால் பல வருட சித்திரவதையை அனுப்பவித்துள்ளார் என பாக்கியம் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றித்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது ஏற்றுக்கொள்ளும் காரணமாக உள்ளதென நீதிபதி தீர்மானித்துள்ளார். இந்த நிலையில் கணவனின் கொடுமையை தாங்க முடியாமல் இந்த கொலை இடம்பெற்றதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு