ஆளுநர் முடிவால் ஆட்டம் காணும் தமிழக அரசியல்.! பதற்றத்தை போக்க போலீசார் குவிப்பு..!!
கோவை மாவட்டதின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்த ஆளுநர் பன்வாரிலால் விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கபட்டுள்ளார்.
இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடகழகத்தினர் அவரை முற்றுகையிட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
முதலில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து தமிழக அமைச்சர்களுடன் ஆய்வு கூட்டத்தில் ஈடுபடபோவதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்திய அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டதாக கூறி அவர் அவர் தங்கியுள்ள விருந்தினர் மாளிகையை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து பதற்றத்தை தவிர்க்க முற்றுகையிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
மீண்டும் கூட்டம் கூடாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது