SuperTopAds

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகிவிட்டது!

ஆசிரியர் - Admin
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகிவிட்டது!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதன் தொடர்பில் முன்வைக்கப்பட்ட 4 மாற்றுத் திட்டங்களையும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பிறகும் அதனுடன் நெருக்கமான பொருளாதார  உறவுகளைத் தக்கவைத்துக்கொள்வது,

இரண்டாவது முறையாகப் பொதுவாக்கெடுப்பு நடத்துவது,

உடன்படிக்கையின்றி வெளியேறுவதைத் தவிர்க்க பிரெக்சிட்டை நிறுத்திவைப்பது போன்ற பரிந்துரைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு கிட்டவில்லை.

அந்த வாக்களிப்பின் முடிவுகள், பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது. இருப்பினும், நாடாளுமன்றத்தின் விருப்பத்தை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று பிரிட்டனின் நீதித் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

பிரதமர் தெரேசா மே முன்வைத்த உடன்படிக்கையை ஏற்கனவே 3 முறை நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது. நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஏதுவான ஒப்பந்தம் தொடர்பில் வாக்களித்தனர்.

அதன் முடிவுகள் அறிவிக்கபட்ட பிறகு பேசிய பிரெக்சிட் அமைச்சர் ஸ்டீபன் பார்க்லே  இம்மாதம் 12ஆம் தேதி உடன்படிக்கை ஏதுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான சாத்தியம் இருப்பதாக  கூறினார்.