ஈபிஆர்எல்எவ் விலகிச் சென்றாலும் பெறுமதியான கட்சி இணைந்துள்ளது! - சிறிநேசன் எம்.பி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டு என்பது தலைமையை கைப்பற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருவதாகவும் அதன் காரணமாகவே அவர்களுக்குள்ளும் போட்டி ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சின்னஊறணியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபைக்கு சின்னஊறணி நான்காம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி சத்தியசீலனின் தேர்தல் செயற்பாடுகளுக்காகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1972ஆம் ஆண்டு ஒரு அரசியல் யாப்பை கொண்டு வந்திருந்தார்கள். சிங்களம் அரச கருமமொழி, பௌத்தம் அரச மதம் என்பனவே அதில் இருந்த முக்கியமான விடயமாகும். இதனால் தமிழர்கள் மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் பின்தள்ளப்பட்டார்கள். 1964ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தை கொண்டுவந்து எமது சகோதரர்களான மலையக தமிழர்களை நாட்டை விட்டு வெளியேற்றினார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா.
1995ஆம் ஆண்டு 600ற்கும் மேற்பட்ட மக்கள் வதை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி புதைகுழி சம்பவமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலத்தில் நடைபெற்றது. அதேபோல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற படுகொலைகளையும் நிகழ்த்தியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தான். 1987ஆம் ஆண்டு இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக மாகாண சபை திட்டத்தின் மூலம் எமக்கு கிடைக்கவிருந்த தீர்வொன்றினை முழுமையாக எதிர்த்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகும். இப்படிப்பட்ட கட்சியை சேர்ந்தவர்களும் தமிழ் மக்களிடம் வாக்குகளை கேட்டு வருகின்றார்கள்.
எமது இனப்பிரச்சினை இற்றைவரை தீர்வு எட்டப்படாமல் இழுபட்டுக்கொண்டிருப்பதற்கு காரணமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தான். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை சேர்ந்த மகிந்த அவர்களும் இதற்கு காரணமாவார். ஆகவே இப்படிப்பட்டவர்கள் எம்மிடம் வாக்கு கேட்பதற்கு அருகதையற்றவர்களாவர்.இதேபோன்று 1957ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டபோது அதை கிழித்தெறிய வேண்டுமென பாதயாத்திரை செய்தவர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களாவார்.
1965ஆம் ஆண்டு டட்லி - செல்வா ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டபோது அதனை நிறைவேற்றாமல் கைவிட்டது ஐக்கிய தேசியக் கட்சி தான். 1983ஆம் ஆண்டு இலங்கையில் மிக மோசமானதொரு இனக் கலவரத்தை அரங்கேற்றியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். எங்களுடைய வரலாற்றில் பயங்கரவாத தடைச் சட்டம் என்ற மோசமானதொரு சட்டத்தை கொண்டுவந்து சாட்சிகளே இல்லாமல் தமிழ் இளைஞர், யுவதிகள் வேட்டையாடப்பட்டது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் தான்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன இதுவரை காலமும் எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை. தீர்த்து வைப்பதாக கூறி இப்போது ஓரளவிற்கு செயற்பட்டு வருகின்றனர். தீர்த்து வைத்தால் தான் நாம் அவர்களை பற்றி சிந்திக்க முடியும். கடந்த காலங்களில் பல்வேறு தவறுகளை செய்தவர்கள் இப்போது எங்களிடம் வாக்குகளை கேட்பதற்கு தகுதியற்றவர்களாவர். நாங்களும் அவர்களுக்கு வாக்களிப்பதற்கு தயாராக இல்லை.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் பசில் ராஜபக்ச பொருளாதார அமைச்சராகவும் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பிள்ளையான் முதலமைச்சராகவும் இருந்த காலம் தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு பொற்காலமாக இருந்தது.இன்றைய நிலையில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பசில் ராஜபக்ச பொருளாதார குற்றவாளியாகவும் கோத்தபாய ராஜபக்ச பொருளாதார குற்றவாளியாகவும் மனித உரிமை மீறல் குற்றவாளியாகவும் விசாரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். மற்றவர் சிறையிலிருக்கின்றார்.
இப்படியான சூழ்நிலையில் அந்தக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் நீங்கள் எதனையும் சாதித்து விடமுடியாது. கடந்தகால கற்பனையில் மிதந்துகொண்டிருக்காமல் இந்தக் காலத்தில் வெல்லப்போகின்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் என்பதை நாங்கள் மிகவும் உறுதியாக கூறுகின்றோம். நாங்கள் செய்கின்ற அபிவிருத்திகளுக்கு சில நேரங்களில் விளம்பரம் இல்லாமல் போகின்றது. எமது பணிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. நாடாளுமன்றத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இரண்டு கோடி ரூபாவினை தங்களுடைய தேவைக்காக பெற்றிருக்கின்றனர் எனவும் தான் மட்டும் அப்பணத்தினை பெறவில்லை எனவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இது அரசாங்கத்தின் பணமோ எங்களின் பணமோ அல்ல. மக்களின் வரிப்பணத்தில் பெறப்பட்ட பணத்தினை அரசாங்கம் குறிப்பிட்ட சில ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் அமைப்பாளர்களுக்கும் கொடுத்திருந்தது. எங்களுக்கு அந்தப் பணம் கிடைக்கவில்லை. அந்த நிலையில் தான் நாங்கள் நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்து பிரதமர் ரணில் அவர்களிடமும் குரல் கொடுத்து அபிவிருத்திக்காக இரண்டு கோடி ரூபாவினை தரவேண்டுமென பிடிவாதமாக கேட்டதன் காரணமாகவே அந்த இரண்டு கோடி ரூபாவினை கடந்த டிசம்பர் மாத முற்பகுதியில் அவர்கள் தந்திருந்தார்கள்.
ஊழல் மோசடிகளோ கையூட்டுகளோ இல்லாமல் நாங்கள் எங்களுடைய பணிகளை திருப்திகரமாக மனநிறைவோடு செய்துகொண்டிருக்கின்றோம். எனவே உண்மையான செய்திகளை கண்டறிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
கஜேந்திரகுமார் பொன்னமபலம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் இணைந்துதான் போட்டியிடுவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் இணைந்தால் யார் தலைமைப் பதவி வகிப்பதென அவர்களுக்குள் ஒரு போட்டி உருவாகிவிட்டது. இப்போதிருக்கின்ற கூட்டு என்பது தலைமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் செயற்படுகின்றார்கள்.1944ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சி ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. 1948, 1949களில் வாக்குரிமைச் சட்டம், குடியுரிமைச்சட்டம்