கண்ணீர் அஞ்சலி

ஊடகவியலாளர் : திரு. ஞானப்பிரகாசம் பிரகாஸ்

இறைவன் அடியில் : 02, Sep 2021வெளியிட்ட நாள் : 03, Sep 2021
பிறந்த இடம் - யாழ்.கொடிகாமம்
வாழ்ந்த இடம் - யாழ்.சாவகச்சேரி
ஊடகவியலாளர் பிரகாஸ் ஞானப்பிரகாசம் அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்....

“பிரகாஸ் ஆகிய நான்”

பேச வார்த்தகளற்று
விம்மி வெடிக்கிறது - மனது
எல்லாருடனும் அண்ணா
அண்ணாவென்று
அன்பாய் கதைக்கும்
உன் முகம் எப்படி மறப்போம்

உன் உடலை - பல்கலைக்கு
மருத்துவம் படிக்கவென
உயில் எழுதி வைத்த உத்தமனே
கொரேனா எனும் காலன்
உன் திருமுகத்தை - நாம்
ஒருமுறையேனும் பார்க்கக் கூட
இடம் தரவில்லையேடா

விரல் நுணியில் உண்மைச் - செய்தி
தந்துவிடும் வித்தைக்காறனே
நீ எம்மோடு இல்லை என்ன - செய்தி
மட்டும் பொய்யாகிடக் கூடாதோ என
ஏங்கித் தவிக்குதடா மனது

தன்னம்பிக்கையின் - மறு
வடிவமாய் நீ எமக்கு
எழுதித் தந்துவிட்டுச் சென்ற
“பிரகாஸ் ஆகிய நான்” - எனும்
வாழ்க்கைக் குறிப்புக்களையே
மீண்டும் மீண்டும்
புரட்டிக்கொண்டிருக்கின்றோம்
எதுவும் செய்திட முடியா
வல்லமையற்றவர்களாய்…

கொரோனா எனும் கொடிய நோயினால் 02.09.2021 அன்று
காவுகொள்ளப்பட்ட இளம் ஊடகவியலாளர்
தம்பி பிரகாஸ் நினைவாக : அருமைத்துரை யசீகரன் (Jaseekaran)

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்யாழ்ப்பாணவலயம்.கொம்