மரண அறிவித்தல்

அமரர் கதிர்காமு முருகப்பெருமான்

தாய் மடியில் : 30, Jun 1942 — இறைவன் அடியில் : 28, Jun 2024வெளியிட்ட நாள் : 01, Jul 2024
பிறந்த இடம் - காங்கேசன்துறை
வாழ்ந்த இடம் - புதுக்குடியிருப்பு
'தமிழகம்' வேவரி, குரு வீதி, காங்கேசன்துறை என்ற முகவரியை பிறப்பிடமாகவும்,
இலக்கம் 03, இடைக்கட்டு (செஞ்சோலை வளாக வீதி), வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு என்ற முகவரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் கதிர்காமு முருகப்பெருமான் இன்று (28) வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.

அன்னார் அமரர்களான கதிர்காமு அம்மணி தம்பதியரின் பாசமிகு மகனும், ஆண்டி தங்கப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னார் சரஸ்வதியின் அன்பு கணவரும், அமரர் க.தெய்வரத்தினம்/தெய்வம், க.மகாலிங்கம்/மகான் ஆகியோரின் அன்புச் சகோதரனும், சந்திரிகா/சூட்டி, மதிவாணன், ஜானார்த்தன், மிதிலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வகுமார்/ரமேஸ், தயாக்கினி, சுகிந்தினி, சசிகரன்/குட்டி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனியவள், கரிகாலன், எல்லாளன், ரூபிசா, பிரவஸ்தி, கவின், பிரபாகரன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இலக்கம் 03, இடைக்கட்டு (செஞ்சோலை வளாக வீதி), வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு என்ற முகவரியில் உள்ள வசிப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரிகை வரும் வியாழக்கிழமை (04/07/2024) மாலை 3.00 மணிக்கு இடைக்கட்டு, வள்ளிபுனத்தில் உள்ள இல்லத்தில் இடம்பெற்று மாலை 4 மணியளவில் வள்ளிபுனம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல் - குடும்பத்தினர்

தொடர்பிற்கு:-
மதி - 0775477638
தகவல்குடும்பத்தினர்